கலங்கரை விளக்கம்
அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் கடலில் நாடு விட்டு நாடு பயணிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்படும் உயர்ந்த விளக்கு கோபுரங்களைத்தான் கலங்கரை விளக்கம் என்று அழைப்பார்கள்
அத்தகையதோர் இடம் தான் அலெக்சாண்டரியா கலங்கரை விளக்கம்
இது உலகின் மிகப் பழமையான கலங்கரை விளக்கம். கட்டப்பட்ட ஆண்டு கி.மு 290ம் ஆண்டு. இதை கட்டி முடி க் க இருபதாண்டு காலம் பிடித்தது. அப்போதைய காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடம் என்று பெயர் பெற்று ருந்தது (எகிப்தின் பிரமிட் நீங்கலாக)
இது எகிப்தின் ப்ரோஸ் என்ற தீவில் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்டது. இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து பல நில அதிர்வுகளை சந்தித்துள்ளது. ஒரு கால கட்டத்தில் இது முற்றிலுமாக கடல் சீற்றத்தில் அழிந்துவிட்டது என்று கருதியிருந்த காலத்தில், கடந்த 1994 ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சு தொல்பொருள் ஆராட்ச்சியாளர்களால் எஞ்சியிருந்த கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்விளக்கம்..
இதற்கு ப்ரோஸ் அலெக்சாண்டரியா என்ற பெயரும் உண்டு. உலகையே தனது போர் திறத்தால் வென்ற அலெக்சாண்டர் தி கிரேட், தனது வெற்றியை கொண்டாடும் விதமாக, தான் வென்ற பகுதிகளுக்கு தனது பெயரை சூட்டுவது வழக்கம். அவ்வாறு அவரது பெயர் சூட்டப்பட்ட பதினேழு நகரங்களுள் இந்த பகுதியும் ஒன்று. இன்றும் அவர் பெயரில் இருக்கும் நகரத்தில் சில நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
அலெக்சாண்டர் இறந்து பல வருடங்கள் கழித்துதான் இது கட்டப்பட்டது என்றாலும் இன்றும் அவர் பெயரை தாங்கி உள்ளது டால்மி சோட்டர் என்ற எகிப்து ஆட்சியாளரால் மாலுமிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் அமைக்கப்பட்டது இந்த கலங்கரை விளக்கம்.
இன்றைய பண மதிப்பில் இது
3 மில்லியன் டாலர் மதிப்புள்ளது.
ஆனால் அன்றைய மதிப்பில் 800 டேலன்ட் (அன்றைய எகிப்தின் பணம்) செலவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது முழுக்க சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் கீழ் பகுதி 100 சதுர அடி அகலமும் 240 அடி உயரமும் கொண்டது. அடுத்த இரண்டாம் நிலை எட்டு புறங்களை கொண்டது.115 அடி உயரம் கொண்டது.
மூன்றாம் நிலை 60 அடி உயரத்தில் உருளை வடிவம் கொண்டிருந்தது, அதன் மேற்பகுதி திறந்த வெளியாக இருந்தது இரவு நேரத்தில் நெருப்பு மூலம் ஒளி ஏற்படுத்தி மாலுமிகளுக்கு வழி காண்பிக்க ஏதுவாக அவ்வாறு அமைக்கப்பட்டு இருந்தது.
இதன் உச்சியில் போஸ்டன் என்ற கடல் தெய்வத்தின் சிலை நிறுவப்பட்டு இருந்தது மொத்தம் இந்த தொகுப்பு 450 அடி உயரம் கொண்டு இருந்தது.
கோபுரத்தின் உட்புறம் உச்சிக்கு செல்ல படிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் வெண்கலத்தாலான மிகப்பெரிய தட்டு கண் ணாடி போல ஒளி வீச பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் நெருப்பின் ஒளி பட்டு பிரகாசிக்க செய்கையில் அது மிக பெரிய அளவிலான வெளிச்சத்தை தரும். மிகப்பெரிய நில அதிர்வுகளால் அழிந்து போன இந்த கோபுரம் கைவிடப்பட்ட கட்டிடமானது.
பகலில் புகையும், இரவில் நெருப்பும் கடல் பயணிகளுக் கு வழி காட்டியாக அமைந்திருந்தது சிறப்பு.
இதன் புகையும் சரி, நெருப்பும் சரி நூறு கி.மீ தொலைவில் வரும் கப்பலுக்கும் வழிகாட்டியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அதிசயம் என்று வரையறை செய்யப்பட்டு இருந்த கட்டிடத்தில் நீண்ட காலம் இருந்த கட்டிடம் என்ற பெருமை
அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கத்திற்கு உண்டு.
உலக அதிசய பட்டியலில் மூன்றாம் இடம் பெற்று இருந்தது
கிரேக்க அறிஞர் ஜூலிஸ் சீசர் தனது கட்டுரையில் இந்த கலங்கரை பயண விளக்கத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்று அலெக்சாண்டரியா நகரத்தின் ஆட்சியாளர்கள் தங்கள் அரசாங்கத்தின் முத்திரையாக இந்த கலங்கரை விளக்கத்தின் படத்தை பயன்படுத்துகின்றனர்
கட்டிடம் மறைந்து இருந்தாலும் இன்னும் அந்நகரத்தின் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது அலெக்சாண்டரியா கலங்கரை விளக்கம்.......
நன்றி
*****************************************
என்றும் அன்புடன்
கார்த்திக்
முதுகலை கணித ஆசிரியர்
திருப்பூர்
*****************************************




0 Comments