காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

நேற்றைய சராசரிகள்! இன்றைய சக்ரவர்த்திகள்!! -"எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள்".

  

     நேற்றைய சராசரிகள்                           இன்றைய சக்ரவர்த்திகள்!


நீங்கள் சராசரியா ? சாதாரணமானவரா? சாமானியனா ? பிறக்கும்போதே பேரறிவோடும் பெருந்திறனோடும் பிறக்கவில்லையே என்று வருந்துகிறாவரா? அப்படியானால் நான் சொல்லப்போகும் இந்த மனிதர் உங்கள் கட்சி.உங்கள் உறவு உங்களை மாதிரி! யார் அவர் ? ஐன்ஸ்டீன் யார் அந்த உலகம் புகழும் விஞ்ஞான மேதையா? ஆம் அவரே தான் அவர் வாழ்வில் நடந்ததைச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.


ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன் நாடுகளால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதன் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்குத் திருப்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா? என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.


தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார்.

 இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை என்று இழுத்தார். "என்ன என்று சொல்லுங்கள். உடனே சரி செய்யப்படும்" என்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.


அறை ஓரத்தில் இருந்து குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, "இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே. கொஞ்சம் பெரியகுப்பைக்கூடை இருந்தால் நல்லது" என்றார்.


திகைத்துப் போய் "பெரிய குப்பைக்கூடையா? எதற்கு? என்றார்கள்.


ஐன்ஸ்டீன் சொன்னார், "நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய, தப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன்.             இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்கக் கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும்வேண்டும்" என்றார். அவரே அப்படி என்றால்.........


கொஞ்சம் நிமிர்ந்து உட்காருங்கள். சாதாரணங்களில் இருந்துதான் அசாதாரணங்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சதாரணமாகி விடாதீர்கள். நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். சின்ன சின்னத் தோல்விகள். சின்ன சின்னச் சறுக்கல்கள்... வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.               ஒரு பொன்னுலகம் நமக்காகக் காத்திருக்கிறது.


அது ஒரு நான்கு வயதுக் குழந்தை.  ஆசை ஆசையாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்துப் பள்ளிக்கூடம் அனுப்பினால் அக்குழந்தையின் தாய். அந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் காது மந்தம்.  "டாம்" என்பது அதன் செல்லப் பெயர். மனம் நிறையக் கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய  சோகங்களைப் பரிசளித்தார் ஒரு ஆசிரியை மூன்று மாதங்கள் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப் பையில் ஒரு காகிதத்தைத் திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை.


"படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் பாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்" அதில் எழுதியிருந்தது   என்று.


குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள்.   "என் மகன் அறிவாளி. அவன் ஒன்றும் முட்டாள் அல்ல. அவனை நானே படிக்க வைப்பேன் அறிவாளி ஆக்குவேன்" என்று ஆவேசமாக அறிவித்தாள். அவன் தாய்.


"படிக்க இலாயக்கில்லை" என்று முத்திரை குத்தப்பட்ட அந்தப் பையனைப் பற்றி அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக் கூடப் பிள்ளைகள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்.


பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றிப் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடத்துக்கிறது போதுமா?

நேற்றைய சராசரிகளே, இன்றைய சக்ரவர்த்திகள்!


இன்னொரு முக்கியமான விசயம். அதே எடிசன் பத்தாயிரம் தடவை தோற்றுப் போன பின்னர்தான் வெடிக்காத பல்பைக் கண்டுபிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா ? தோல்வி என்பது ஒரு பெரிய விசயமே அல்ல நண்பர்களே.


அந்த எடிசனுடைய அறுபத்தி ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பெறுமான அவரது ஆய்வுக்கூடம் தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷுரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார்.


"நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகி விட்டன. நல்லது. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுகளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு" என்றார்.


இந்தத் தீ விபத்து நடந்த மூன்றாவது வாரத்தில் அவர் "போனோகிராப்" என்பதைக் கண்டறிந்தார்.


இறையன்பு அவர்கள் புத்தகத்தில் நான் படித்த ஒரு செய்தி.


ஒரு ஜென் துறையின் குடிசை பற்றி எரிந்தது. நெருப்பு தன் பல நாக்குகளைச் சுழற்றிச் சுழற்றித் தன் பசி ஆறியது. பலர் அழுதனர். ஆறுதல் சொல்லினர். எரிந்து முடிந்த சாம்பலுக்குள் நின்று கொண்டு கம்பீரமாக வானத்தைப் பார்த்தபடி துறவி சொன்னார், ஆஹா நிலவின் ஒளியை தடுத்து மறைத்த கூரை எரிந்து விட்டதே என்று கொண்டாடினார்.


எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள்.



     நன்றி 


ம.அரவிந்த் 

கணித ஆசிரியர் 

கோவை



            கல்வி ஆசிரியர்கள்










Post a Comment

0 Comments