என்ன படிக்கலாம்?
எப்படி ஜெயிக்கலாம்?
ஒரு சின்னக் குழந்தையின் கையில் புத்தகம் இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்லுவார்கள் ? குழந்தே சமத்தா இருக்கணும். புத்தகத்தைக் கிழிச்சிடக் கூடாது என்பார்கள். ஆனால் கவிக்கோ அப்துல்ரகுமான் வித்தியாசமாகக் கவலைப்பட்டார்.
புத்தகங்களே சமர்த்தாக இருங்கள். குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள் என்று எழுதினார். இது நிரம்பவும் யோசிக்க வேண்டிய விசயம். பாடத்திட்டத்தில் என்ன படிப்பது என்பது முதல் பிரச்சனை. பாடத்தைக் தாண்டிப் பாராத புத்திரன் என்ன படிப்பது என்பது அடுத்த பிரச்சனை.
படிப்பதா, வேண்டாமா என்பதே கூடப் பலருக்குப் பிரச்சினை! முதலில் பாடத்தைப் படி படிப்படியாய் வெற்றியடையலாம் | பொறியலும் மருத்துவமும் மட்டும் தான் படிப்பு என்பதில்லை. நூற்றுக்கணக்கான படிப்புகள் உலகத்தில் இருக்கின்றன.
முதலில் இந்த விசாலமான பார்வை சின்னப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வேண்டும். வறுமையாலும், வாய்ப்பின்மையாலும் தான் படிக்க முடியாத படிப்பைத் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று சில பெற்றோர்கள் பிள்ளைகளைக் கல்விச் சிலுவையில் அறைகிறார்கள். இது சரியல்ல.
மாணவனின் திறன், விருப்பம், கொள்ளளவு, படிக்கும் பழக்கம் இயல்பு என்று பல விசயங்கள் படிப்பை முடிவு செய்யக் கூடியவை. கொஞ்சம் முன் பின்னான மாணவர்களைப் பெற்றோர் தயாரிப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் முற்றிலும் நேர்மாறான இயல்புடைய பிள்ளைகளைத் தங்கள் கனவுகளைச் சுமக்கும் பிணந்தூக்கிகளாகச் சில பெற்றோர்கள் செய்வது நல்லதல்ல.
நர்ஸிங் ஹோம்களைக் கட்டி வைத்து விட்ட பெற்றோர்கள் அதைக் கட்டிக் காக்கும் ஆசையில் மட்டுமே பிள்ளைகளை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைத்த கதை உண்டு. தேர்வுத் தோல்விகள் மனதை வருத்த, பெற்றோர்படுதல் மகிழ்வைக் குறைக்க, போதை மாத்திரை தின்னும் மருத்துவ மாணவர் ஒரு சிலர் உண்டு.
பெற்றோர்கள் பிள்ளைகளை ஜிவ்வென்று உயர்த்தும் சிறகாக இருக்க வேண்டுமே ஒழிய அழுத்தம் சிலுவையாக இருக்கக் கூடாது. ஈடுபாட்டுடன் ஆர்வமாகப் பிள்ளைகள் படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பின் மூலம் அடைய முடியாது. அடிமை இந்தியாவில் நடந்த, பல்லாண்டுக்கு முந்தைய சுவையான செய்தி சொல்லுகிறேன். தலையில் கட்டுக் குடுமி, காதில் கடுக்கன், அவன் நெற்றியில் பளிச்சென்று திருநீறு ஒளி உமிழும் கண்கள் கொண்ட சிறுவன் சாமிநாதன். அந்தப் பையன் மேலே என்ன படிப்பது என்பது விவாதப் பொருள்.
கூட்டத்தில் சேரில் சாய்ந்திருந்த குடும்பப் பெரியவர் குரல் ஓங்கி ஒலித்தது. "இதபார் ஒண்ணு சமஸ்கிருதம் படி அல்லது இங்கிலீஷ் படி இங்கிலீஷ் படிச்சா இந்த லோகத்திலேயே சவுக்கியமா இருக்கலாம். நீ என்ன படிக்கப் போற "தமிழ் படிக்கப் போறேன்" என்றான் சிறுவன். "ஏன் உறுமினார் பெரியவர். "இங்கிலீஷ் படிச்சா இங்க நல்லா இருக்கலாம் சமஸ்கிருதம் படிச்சா அங்க நல்லா இருக்கலாம். தமிழ் படிச்சா இரண்டு இடத்திலேயும் நல்லா இருக்கலாம்" என்று பளிச்சென்று பதில் சொன்னான் சிறுவன் சாமிநாதன்.
அவர் தமிழ் படித்ததால் தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது.அவர் தான் தமிழ்த் தாத்தா டாக்டர் உவே. சாமிநாத ஐயர் எல்லோரும் தமிழ் படியுங்கள் என்பது என் செய்தி அல்ல. உகந்ததைத் தேர்ந்தெடுத்து உறுதியாகப் படிப்பவர்கள் உருப்படுகிறார்கள். உயர்கிறார்கள் என்பதை என் செய்தி.
குறிப்பிட்ட படிப்பு உயர்வானது என்றால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதில் ஆர்வம் ஏற்படுத்துங்கள். அக்கறை உண்டாக்குங்கள். அதைப் படிக்கும் முடிவைப் பெற்றோர்களே திணிக்காதீர்கள். மாணவனே அந்த முடிவை எடுக்கும்படி உணர்பூட்டுங்கள். நான் படித்த கதை ஒன்று. மென்ஷியால் என்ற திருமேல் நாட்டுச் சிறுவனைப் பற்றியது. அவன் தந்தையை இழந்தவன்.
தாயோ கடினமான நெசவுத்தொழில் மூலம் துணி நெய்து, விற்றுப் பொருள் ஈட்டித் தன் மகனைப் படிக்க வைத்தாள். ஆனால் மென்ஷியானுக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. பார் சுற்றிக் கொண்டிருந்தான். இனி பள்ளிக்கூடம் போகக் கூடாது என்று முடிவெடுத்து வீடு திரும்பி வந்தான்.
அவனது தாய் விலை உயர்ந்த துணியை நெய்து கொண்டிருந்தாள். அழகான அந்தத் துணியை ஆசையாகப் பார்த்தபடி வந்து தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "அம்மா எனக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை நானும் உன்னுடன் இருந்து இந்த அழகான துணி நெய்ய உதவுகிறேன்" என்றான். அடுத்த நிமிடம் கோபத்துடன் ஆவேசமாக தாய் அந்த விலை உயர்ந்த துணியைக் கிழித்து எறிந்தாள். மகன் பதறிப்போய், "என்னம்மா இப்படிச் செய்து விட்டாய் விலை உயர்ந்த துணியாயிற்றே" என்றான்.
"விலை மதிப்பில்லாத கல்வியை நீ இழக்கிறாய் எதிர் காலத்தைப் பாழாக்குகிறாய்! அதை விடா இது பெரிய அழிவு!" என்கிறாள். அம்மா தாயைக் கட்டிக் கொண்டு அழுத மகன் பள்ளிக்கூடம் போக ஒப்புக் கொண்டான். உருவாக்குவது தான் பெற்றோர்கள் வேலை. உருக்கி ஊற்றுவது பெற்றோர்கள் வேலை அல்ல.
விரும்பி, படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்கள் உயர்வது திண்ணம். உதாரணம் பாக்டர். உ.வே.சா. அப்படி இன்றைய இளைஞனும் இருக்கப் பழகினால் வெற்றிநிச்சியம்!
முழுமையும் படித்து மகிழ்ச்சி அடைந்த அனைவருக்கும் நன்றி.........
இப்படிக்கு
கல்வி ஆசிரியர்கள்



0 Comments