காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

*தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்*

 

அனைத்துப் பள்ளி  மாணவர்களுக்கும்      கல்வி ஆசிரியர்கள் சார்பாக எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.....

 *தேர்வு அறையில் மாணவர்கள்  அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்*


*தேர்வு நெருங்க நெருங்க பதற்றம் தொற்றிக் கொள்ளும், தேவையில்லாத பதற்றம் வேண்டாம்.                       

படித்த பாடங்களை மீண்டும் படித்து நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.



 *தொடர்ந்து இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பதை விட சிறிய இடைவெளிவிட்டுப் படிப்பது நல்லது, பாடங்கள் மனதில் நன்கு பதியும்.


*தேர்வு நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவழித்து உங்களது படிப்புக் கவனத்தை சிதறடிக்கக் கூடாது. வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும், தனி அறையில் அமர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்து நேரத்தை வீணாக்கக் கூடாது.


*அமைதியான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு நேரத்தில் கேள்வித்தாள் அவுட் ஆகிவிட்டது. இந்த கேள்விதான் வரும் என்ற வதந்திகளை நம்பாதீர்கள்.


*தேர்வுக் கால அட்டவணையை வீட்டில் அனைவரும் பார்க்கும் படி ஒட்டி வைக்கவும். எந்தெந்தத் தேதிகளில் தேர்வு நடைபெறுகின்றன என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்தும்.


*பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், கையேடுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் வைக்கவும், இல்லையெனில் தேர்வு நேரத்தில் தேடும் நிலை ஏற்படலாம். கவனமாக இருக்கவும்.


*தேவையான பேனா, பென்சில் போன்ற எழுதுபொருள்களை தேர்வுக்கு முந்தைய நாளிலே எடுத்து தயாராக இருக்கவும். 


*தேர்வுக்கு முந்தைய நாளில் கண்விழித்து நள்ளிரவு வரை படிக்க வேண்டாம். போதுமான தூக்கம் இல்லாவிடில், தேர்வு எழுதும் போது சோர்வு ஏற்படும்.


 *தேர்வுக்குச் செல்லும் போது சாப்பிடாமல் போவதை தடுத்து அளவோடு சாப்பிட்டுச் செல்லவும்.


*தேர்வு தொடங்க ஒரு மணி நோத்திற்கு முன்பாகவே, தேர்வு நடைபெறும் பள்ளிக்குச் சென்று விடுதல். காலதாமதத்தையும், கடைசி நேரப் பரபரப்புகளையும் குறிக்கும்.


 *தேர்வு மையத்தில் வீணாக அரட்டை செய்வதை தவிர்த்து, பாடக்குறிப்புகளை சிறிது நேரம் திருப்பிப் பார்க்கவும்.


*தேர்வு அறையில் உங்களது தேர்வு எண் குறிப்பிட்ட இருக்கையில் அமரவும். உங்கள் இருக்கையிலோ, உங்கள்      Pouch யிலோ தேவையில்லாத காகிதங்கள் இருப்பின் அவற்றை வெளியேற்றிட வேண்டும்.


*தேர்வுக் கூடத்தில் உங்களிடம் பிட் இருப்பது கண்டுபிடித்தாலோ அல்லது காப்பி அடிப்பது தெரிந்தாலோ நீங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள். குறுக்கு வழிகளில் செல்வதைத் தவிர்க்கவும்.


*உங்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும் பரபரப்பாக உடனே விடைகளை எழுதத் தொடங்கி விடாதீர்கள். கடினமான வினாக்களைப் பார்த்து சோகமாகி விட வேண்டாம்.


*வினாத்தாளை முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு, முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதத்தொடங்குங்கள். 


*விடைத்தாளில் தேர்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ள இடத்தைத் தவிர வேறு இடங்களில் தேர்வு எண்ணையோ, பெயரையோ எழுதக் கூடாது.


*விடைத்தாளில் தேர்வு எண்ணை சரியாக எழுதியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.


*தேர்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே பேனாவால் எழுத வேண்டும். புதிய பேனாவால் எழுதும் போது அது சில நேரங்களில் சரியாக எழுதாமல் போகலாம்.


*ஏற்கனவே பயன்படுத்திய பேனாவையே பயன்படுத்தவும் முன்னெச்சரிக்கையாக, எக்ஸ்ட்ரா பேனா வைத்துக் கொள்ளவும். 


*தேர்வு அறையில் மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். விடைகளை எழுதுவதில் மட்டுமே முழுமையான கவனம் இருக்கட்டும்.


*ஒவ்வொரு வினாவிற்க்கும் விடை அளிக்க எவ்வளவு நேரம் என்று திட்டமிட்டுக்கொண்டு விடைகளை எழுத வேண்டும்.


*சில வினாக்களுக்குப் பதில் தெரிந்தும் நேரம் இல்லாமல் போய் விடை எழுதாமல் விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் பிடிக்கலாம்.

kalviasiriyarkal.blogspot.com


*அது போன்ற நிலையில் அடுத்த எழுதும் விடைகளில் அந்த நேரத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.


*விடை எழுதும் போது தேவையான இடங்களில் வரைபடங்களை வரைய வேண்டும்.அதற்காக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது.


*தேர்வு நேரத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம் மட்டுமே கேட்க வேண்டும். பக்கத்தில் உள்ள மாணவர்களிடம் கேட்கக்கூடாது.


*ஆரம்பம் முதல் இறுதிவரை கையெழுத்து சீராக இருக்க வேண்டும். அதற்காக மெதுவாக எழுதி நேரத்தை வீணடிக்கவும் தேவையில்லை.


*அடித்து அடித்து எழுதுவதைத் தவிர்க்கவும். எந்த வினாவுக்கும் அரைகுறையாக விடையளிக்க வேண்டாம்.


*ஒரு வினாவுக்கு விடை நன்கு தெரிகிறதே என்று நேரம் போவது தெரியாமல் தேவைக்கு அதிகமாக நீட்டி எழுத வேண்டாம். இவ்வாறு இருந்தால் மற்ற வினாக்களுக்கு விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.


*தேர்வு நேரம் முடிய சிறிது நேரமே இருக்கிறது என்றால் எழுத வேண்டிய விடைகளை சுருக்கமாக எழுதி, உரிய நேரத்திற்குள் முடிக்கப் பார்க்க வேண்டும்.


*தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு, எழுதிய விடைகளை சரிபார்ப்பது நல்லது. தெரியாத வினாக்களுக்கு விடைகளை எழுதவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


*தெரிந்த அனைத்து வினாக்களுக்கான விடைகளை எழுதி முடித்தபின், தெரியாத வினாக்களுக்கான விடைகளை நினைவிற்கு கொண்டு வந்து முயற்சிக்க வேண்டும்.


*விடைத்தாளை தேர்வு எழுதிய மேஜையிலேயே வைத்து விட்டு வெளியேறாமல், அறைக்கண்காணிப்பாளர் வந்து விடைத்தாளைப் பெற்ற பிறகுதான் வெளியேற வேண்டும்.


*விடாமுயற்சியும்,கடின உழைப்பும் வெற்றிக்கு வழிகாட்டி தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். 

வெல்வது நிச்சயம்! 

வெற்றி நிச்சயம்!!





என்றும் அன்புடன் 

-------------------------------

கார்த்திக்

முதுகலை கணித ஆசிரியர் 

திருப்பூர்-641664





kalviasiriyarkal.blogspot.com















Post a Comment

0 Comments