காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வின் போது, செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் கடைபிடிக்க வேண்டிய கருத்துக்கள்

 

அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வின் போது,                      செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் கடைபிடிக்க வேண்டிய கருத்துக்கள்


*தேர்வு என்பது நாம் கற்ற கல்வியறிவை சோதித்துப் பார்க்கும் முயற்சி, அது நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும் ஒரு விதத்தில் உதவுகிறது.


*எந்தவொரு முயற்சிக்கும் ஒரு ஈடுபாடு இருக்க வேண்டும். அதே சமயம் எல்லா முயற்சியிலும் நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைத்து விடாது.

*நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைப்பதற்கு பயிற்சி அவசியம்.                  மற்றவர்களைக் கருதாமல் உங்களுக்கு திருப்தி ஏற்படும் அளவுக்கு பயிற்சியும், முயற்சியும் இருக்கட்டும்.


*பெரிய அளவில் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளாமல் நன்ற படித்திருக்கிறோம், நன்றாக எழுதுவோம் என்ற எண்ணம் மட்டு இருக்கட்டும்.


*மனதை ஒருமுகப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.                                  கிரிக்கெட் சீரியல் எதிலும் மனம் செலுத்தாதீர்கள்.                                    எதுவும் உங்கள் கவனத்தை திசை திருப்பாமல் இருக்க பழகுங்கள்.              சுய கட்டுப்பாட்டை வளர்த்து கொள்ளுங்கள்.


*சில பெற்றோர் தேர்வு நேரத்தில் பிள்ளைகளைப் படித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். அப்படிச் செய்யக் கூடாது.


*பெற்றோரின் எதிர்பார்ப்பும் பயமும் நியாயமானது தான் என்றாலும் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது பிள்ளைகளுக்கு தினமும் ஒரு மணி நேரமாவது மன ரீதியான ஓய்வு வேண்டும்.


*தூக்கம் மிக அவசியமானதாகும். தூங்கினால் தான் மூளைக்கு - போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கும். ஆக்ஸிஜன் சரியாக கிடைத்தால் தான் படிப்பதை மூளை நன்றாக சேமிக்கும்.


*எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அப்படி ஒப்பிட்டால் தேவையற்ற மனக்குழப்பம் ஏற்படும். படித்ததை மறக்கவும், தன்னம்பிக்கை இழக்கவும் வாய்ப்பு உண்டு.

*நீங்கள் என்ன படித்தீர்களோ, அதை தெளிவாக எழுதுங்கள் போதும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி படிக்கலாம். படித்ததை எழுதி பார்க்கலாம்.


*சக மாணவர்களோடு போட்டி இருக்கலாம், பொறாமையாக இருக்கக் கூடாது. அதனாலும் கூட தேர்வு எழுதுவதில் பதற்றம் உண்டாகும்.


*நீங்கள் ஒரு பதிலை எப்படி எழுதுகிறீர்கள் என்பதில் இருந்துதான் திருத்தும் ஆசிரியர் உங்களை மதிப்பிடுவார்.                                    படித்ததை அப்படியே எழுதாமல் உங்கள் மொழியில் எழுதலாம்.


*அழகாக, அடித்தல் இல்லாமல் தெளிவாக எழுதுங்கள். இது உங்களுக்கே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும், டைம் மேனேஜ்மென்ட் ரொம்பவே முக்கியம்.


*அதீத கற்பனைகள் வளர்த்துக் கொள்ளாதீர்கள். எந்த காரணத்திலும் குறுக்கு வழியை கையாள நினைக்காதீர்.வீட்டு பிரச்சனைகள் குடும்பத்தில் சண்டை, எதுவாக இருந்தாலும் எதிலும் கவனம் செலுத்தாதீர்கள்.


*தேர்வு பற்றிய கற்பனையை உதறித் தள்ளுங்கள் நேருக்கு நேராக அதை தேர்வறையில் சந்தித்துக் கொள்ளலாம். நன்றாக எழுத முடியுமா? படித்த கேள்வி தான் வருமா? என தேவையற்ற கேள்விகளை உருவாக்கி பதில் தேடாதீர்கள்.


*குழப்பமும் பயமும் தான் பதிலாக கிடைக்கும் தேர்வு அறைக்கு செல்லும் முன் வரை சிலர் படித்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி செய்யவே கூடாது.


*எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு முடிந்தவரை நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும்.


*உங்களால் முடியும். உங்களால் முடியாதது வேறுயாராலும் முடியாது. வேறுயாராலும் முடியாதது உங்களால் முடியும். இதுதான் எதார்த்தம். 


*நான் நன்றாகவே படித்துள்ளேன் நன்றாக தேர்வு எழுதுவேன். இதில் நான் பயப்படவோ பதற்றப்படவோ ஒன்றுமில்லை என்பதில் தெளிவாக இருந்தாலே போதும், நிச்சயம் நீங்கள் வெற்றியாளர்தான்.



நன்றி மாணவர்களே!


என்றும் அன்புடன்: 

கார்த்திக்., 

முதுகலை கணித ஆசிரியர்.,

 திருப்பூர்.




              கல்வி ஆசிரியர்கள்




.



Post a Comment

0 Comments