*வீசிங் என்ற மூச்சு திணறலை நிரந்தரமாக நீக்கலாம்..!*
வீசிங் என கூறப் படுகின்ற மூச்சு திணறல் அல்லது ஆஸ்துமாவிற்கு எத்தனை மருத்துவங்கள் இருந்தாலும் போதாது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் ஆஸ்துமாவின் தாக்கம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று கடுகு எண்ணெய். அடுத்து பூண்டு ஆஸ்துமாவை முற்றிலும் தடை செய்யும் சக்தி பூண்டுக்கு உள்ளது.
*உங்களுக்கு வீசிங் பிரச்சனை இருக்கா?
வீசிங் என்பது மூச்சுத் திணறலின் ஒரு வகை. இதனை கட்டுப்படுத்த மருத்துவரின் பரிந்துரையின்படி சிலர் இன்ஹெலர் பயன்படுத்துவார்கள். ஆகவே, இயற்கை தீர்வுகள் மூலம் இந்த பாதிப்பை முற்றிலும் போக்கலாம் அல்லது கட்டுக்குள் வைக்கலாம்.
*மஞ்சள்*
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அரைத்த மஞ்சள் தூளை சேர்த்து கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால், வீசிங் குறைகிறது.
*கற்பூரம் மற்றும் கடுகு கடுகு எண்ணெய்,*
கடுகு எண்ணெய்யை சிறிதளவு எடுத்து சூடாக்கி, பச்சை கற்பூரத்தை சேர்த்து ஒரு ஜாடியில் வைத்துக் கொள்ளவும், இதனை நுகர்வதால் உங்களுக்கு ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
*எலுமிச்சை சாறு*
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் நீரில் கலந்து தினமும் காலையில் பருகுவதால் வீசிங் வராமல் தடுக்கலாம், சர்க்கரை சேர்க்காமல் பருகுவதால் உங்கள் சுவாச பாதை சீராகி சளி மற்றும் இருமல் குறைகிறது.
*தேன்*
தேனுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண் கிருமிகள் எதிர்ப்பு தன்மை உண்டு, அதனால் இருமலை உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்து ஆஸ்துமா வீசிங்கை அதிகப்படுத்தும் அழற்சியை தடுக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கவும் தேன் உதவுகிறது.
*பூண்டு*
தொற்று பாதிப்புகள் மூச்சு குழாயில் சளி உற்பத்தி மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது. இதுவே வீசிங்கின் மூலக்காரணம் ஆகும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு பூண்டுகளை சாப்பிடுவதன் மூலம் கடுமையான ஆஸ்துமாவைக் கூட தடுக்கலாம். பூண்டு மாத்திரைகளும் கடைகளில் கிடைக்கின்றன ஆனால் அவை இயற்கை பூண்டை விட சக்தி வாய்ந்ததாக இருக்காது.
*ஆளி விதைகள்*
தினமும் ஒரு தேக்கரண்டி ஆளி விதை எண்ணெய்யை பருகுவதால் வீசிங் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, தினமும் அரை தேக்கரண்டி ஆளிவிதைகளையும் மென்று சாப்பிடலாம்.
அனைவருக்கும் நல்ல கருத்துக்களை/ தகவல்களை தெரிந்து கொண்டதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி.....
வணக்கம்........



0 Comments