காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

பருத்திப் பால்- யார் குடிக்கலாம்? யாரெல்லாம் குடிக்க கூடாது?

 *பருத்திப் பால்-  யார் குடிக்கலாம்? ~யாரெல்லாம் குடிக்க கூடாது?:*

அனைவருக்கும் வணக்கம்.....

நாட்டு பருத்தி கொட்டை - 2 கப்

பனங்கருப்பட்டி - 1 - 1/2 கப்

தேங்காய் பால் - 1 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

பச்சரிசி  _ 2 - 4 டிஸ்பூன்

ஏலக்காய் - 4

சுக்கு பொடி - 1/4 டிஸ்பூன்


* பருத்திக் கொட்டையை இரவு முழுவதும் ஊற வைக்கவும், மறுநாள் காலை அரைத்து பால் எடுக்கவும்


* பச்சரிசியை சிறிது ஊற வைத்து அரைக்கவும்.


* பருத்திப்பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும் பச்சை வாசனை போக, பிறகு பச்சரிசி மாவை தண்ணீரில் கலந்து பருத்தி பாலில் சேர்த்து நன்கு வேகும்படி மிதமான தீயில் காய்ச்சவும்.. 


* பிறகு கருப்பட்டியை சேர்த்து கரைத்ததும் தேங்காய் பால் சேர்த்து ஏலக்காய், சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி சுட சுட பரிமாறவும்.. 


* தயவு செய்து மருந்து அடிக்காத நல்ல நாட்டுபருத்திக் கொட்டையை பயன்படுத்தவும்


* பெண்களுக்கு மிக மிக நல்லதுங்க..... முதுகுதண்டு வலிக்கு (L3 , L4, L5) மிக சிறந்தது. கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு, மார்பக சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வு...                            கேன்சர், வேறு கட்டிகள், மாதவிடாய் போன்ற ப்ரச்சனைகள் கிட்டவே வராது... 


* தொண்டை வலி, மார்புச்சளி,         வறட்டு இருமல் போன்றவைகளுக்கு பருத்தி பால் குடிங்க.வயிற்று புண்ணையும் சரிசெய்யும்.


* வாரத்தில் இரண்டு நாள் கண்டிப்பா பருத்தி பால் குடிங்க.


* கர்ப்பிணி பெண்கள் பருத்திப் பாலைத் தவிர்க்கவும்.....


அனைவரும் நல்ல தகவல்களை தெரிந்து கொண்டதற்கு நன்றி.......

 வணக்கம்......




Post a Comment

0 Comments