பத்துப்பாட்டு-நூல் குறிப்பு மற்றும் விரிவான விளக்கங்கள்
பத்துப்பாட்டின் வரலாறு;
பாவலரொடு காவலரும் கைகோர்த்து கவிபுனைந்து கன்னித் தமிழ் வளர்ந்த காலம் சங்க காலம். அக்காலத்தில் தான் பழங்காலத்தில் தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் அழிந்து மறைந்தவை போக எஞ்சியவை காக்கப்பட்டு புலவர்களும் புரவலர்களும் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியம் என பெயரால் குறிக்கப்பட்டது.
சங்க இலக்கியங்கள் என குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு தான்
"எட்டுத்தொகை"
"பத்துப்பாட்டு"
இவைகளே பதினெண்மேற்கணக்கு நூல்கள் ஆகும்.
இங்கு பழந்தமில் நாட்டினரின் வாழ்க்கைமுறை பண்பாட்டுச் சிறப்பு பற்றிய அதிக தகவல்கள் பொதிந்து கிடக்கும் 'பத்துப்பாட்டு நூலின் விளக்கத்தை இங்கு காண்போம்'
1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக்காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப்பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
என நீண்ட நெடும் பாடல்களாக அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பு
"பத்துப்பாட்டு ஆகும்'..
பாட்டு எனவும் அழைக்கப்படும் பத்துப்பாட்டில்"இதில் இடம்பெறும் பாடல் ஒவ்வொன்றிலும் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுு ஆசிரியர்களால் "நீண்ட ஆசிரியப்பாவால் இயக்கப்பட்டது"
பாடல்களின் அடி எல்லை
"103-782 அடிகளை உடைய நீளமான பாடல்கள்"
உதாரணமாக:
முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச்சிறிய பாடல்.
மதுரைக்காஞ்சி 782 அடிகளைைை உடைய மிகப்பெரிய பாடல்.
பத்துப்பாட்டில் அகப்பொருள் பற்றிய நூல்கள் பின்வருமாறு காணலாம்:
1. முல்லைப்பாட்டு
2. குறிஞ்சிப்பாட்டு
3. பட்டினப்பாலை
பத்துப்பாட்டில் புறப்பொருள் பற்றிய நூல்கள் பின்வருமாறு காணலாம்:
1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5.மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)
6. மதுரைக்காஞ்சி
* பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்து அமைந்த நூல்:
"நெடுநல்வாடை"
*பத்துப்பாட்டில் இடம்பெறும் ஆற்றுப்படை நூல்கள்:
"பெரும்பாணாற்றுப்படை
"சிறுபாணாற்றுப்படை
"பொருநராற்றுப்படை
"திருமுருகாற்றுப்படை
"மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)
பத்துப்பாட்டு நூலை முதலில் பதிப்பித்தவர்:
"தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்"
பத்துப்பாட்டு நூலினை பட்டியலிடும் ஒரு வெண்பா பாடல்:
முருகு பொருநாறு பானிரெண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை - கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
0 Comments