காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

PG-TRB TET & TNPSC BOTANY STUDY MATERIALS-1. தாவரவியல்- ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்:

 PG-TRB - TET & TNPSC BOTANY STUDY MATERIALS-1.

தாவரவியல்-ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்:


01.     தாவர செல்லில் D.N.A.   காணப்படும் பகுதி?

A.   மைட்டோகாண்ட்ரியா

B.   பசுங்கணிகம்

C.   உட்கரு

D.   மேற்கண்ட அனைத்தும்

02.     அதிகமாக உபயோகப்படும் பென்சிலின் எதிர்ப்பு  பொருளை உருவாக்குவது?

A.   ஆல்கா

B.   பாக்டீரியம்

C.   தாவரம்

D.   பூஞ்சை

03.     தாவர உலகமானது இரண்டு பெரும்பிரிவுகளைக்   கொண்டது அவை?

A.   நீர்வாழ்பவை மற்றும்   நிலத்தில் வாழ்பவை

B.   ஒரு வித்திலை மற்றும்   இருவித்திலைதாவரங்கள்

C.   கிரிப்டோகாம் மற்றும்   பெனரோகாம்

D.   பிரையோபைட் மற்றும்   டெரிடோபைட்

04.     ஸ்பைரோகைராவில்   நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது?

A.   பிளத்தல்

B.   துண்டாதல்

C.   இணைதல்

D.   ஸ்போர் உருவாக்குதல்

05.     புளோயம் திசு சார்ந்தவற்றின்பொருந்தாதவற்றை   கண்டறிக?

A.   மர நார்கள்

B.   சல்லடைக்குழாய்

C.   புளோயம் நார்கள்

D.   துணை செல்கள்

06.     நைட்ரஜனைநிலைப்படுத்தும்பாக்டீரியாக்கள் எதன்   வேர்களில் காணப்படுகிறது?

A.   லெகுமினஸ் தாவரம்

B.   புற்கள்

C.   வேப்பமரம்

D.   எலுமிச்சை

07.     தேசிய வாழை ஆராய்ச்சி   மையம் உள்ள இடம்?

A.   ஈரோடு

B.   கோயம்புத்தூர்

C.   கன்னியாகுமாரி

D.   திருச்சி

08.     ஒளிச்சேர்க்கையின்போது  நடக்கும் ஒளிச்செயலில்   உருவாக்கப்படுவது?

A.   NADPH2 & ATP

B.   (CH2O) n

C.   CO2

D.   ATP

09.     கீழ்க்கண்டவற்றில் எவை  நீலப்பசும்பாசியைச்  சாராதவை?

A.   சர்காசம் நீலப்பசும் பாசிவகையைச் சார்ந்தது

B.   கிராம் நெகடிவ்ஒளிச்சேர்க்கையின்நீலப்பசும்பாசி

C.   ஸ்பைருலினா உணவுவகையைச் சார்ந்தநீலப்பசும்பாசி

D.   பில்லியன்ஆண்டுகளாக வாழ்வது

10.     தக்காளி பழத்தின்  வண்ணத்திற்கு இதில்  காணப்படும் பொருள்    காரணமாகும்?

A.   ப்ளேவனாய்டுகள்

B.   டேனின்கள்

C.   கரோட்டினாய்டுகள்

D.    ஆந்தோ சையனின்கள்.

11.     கீழ்க்கண்டவற்றில்     பொறுத்தம் அற்றதைகுறிப்பிடு?

A.   லைக்கோபைட்டா

B.   ஸைலோபைட்டா

C.   ஹிஸ்டிரோபைட்டா

D.   பிலிகோபைட்டா

12.     மைட்டோகாண்ட்ரியாவை   பாதி சுயேட்சையான செல்   நுண்ணுறுப்புகள் என்றுகூற காரணம்அவை எவற்றை  பெற்றுள்ளதால்?

A.   DNA மற்றும் RNA

B.   mRNA மற்றும் rRNA

C.   DNA மற்றும்ரைபோசோம்கள்

D.   RNA மற்றும்ரைபோசோம்கள்

13.     இடமாற்றம் ஆர்.என். (tRNA) ஆற்றல் மிகுஅமோனோ  அமிலத்தை இதன்  எப்பகுதியில் எடுத்துச்  செல்கிறது?

A.   3' CCA முடிவிடம்

B.   ஆண்டிகோடான் நுணி

C.   5' OH முடிவிடம்

D.   T Ψ C வளைவு

14.     கீழ்கண்டவற்றில் எந்த  பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப் படுகிறது?

A.   அஸ்பர்ஜில்லஸ்

B.   பெனிசிலியம்

C.   ஜிப்பெரெல்லா

D.   நியுரோஸ்போரா

15.     ஒளிவினையின்   விளைபொருட்கள் யாவை?

A.   ADP + NADPH2

B.   கார்போஹைட்ரேட்

C.   ATP + NADP

D.   ATP + NADPH2

16.     அராக்கிஸ் ஹைபோஜியா  எனப்படும் வேர்க்கடலை  தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்?

A.   மியுசேசி

B.   யூபோர்பியோசி

C.   பேபிலியோனேசி

D.   மால்வேசி

17.     டெல்டா எண்டோடாக்சின்  எனும் நச்சு புரதத்தை  உற்பத்தி செய்யும் உயிரி?

A.   பாசில்லஸ் லாக்டி

B.   .கோலை

C.   பாசில்லஸ்தூரின்ஜெனிசிஸ்

D.   ஸ்டெப்டோமைசிஸ்கிரிசஸ்

18.     வாட்சன்கிரிக் டி.என்.வின்  மறுபெயர்?

A.   B - DNA

B.   A - DNA

C.   Z - DNA

D.   C - DNA

19.     ஹாஸ்டோரியாக்கள் என்பன யாவை?

A.   சாருண்ணிகளில்காணப்படும் சிறப்புஉறுப்புகள்

B.   ஒட்டுண்ணிதாவரங்களில்காணப்படும் சிறப்பு வேர்அமைப்புகள்

C.   தற்சார்பு உயிரிகளின்உணவு உற்பத்திமையங்கள்

D.   பிறசார்பு ஊட்டஉயிரிகளின் சீரணமண்டலம்

20.     தாவர வைரஸ்களில்   காணப்படுவது?

A.   டி.என்.

B.   ஆர்.என்.

C.   கேப்சிட்

D.   இலைகள்.

21.     பருவ காலங்களில்  உண்டாகும் வெப்ப  நிலைமாற்றங்கள் கிளாடோசிரன் உடல்வடிவத்தில்  மாற்றத்தைலஏற்படுத்தும்   நிகழ்ச்சியின்பெயர்?

A.   டையபாஸ்

B.   சைக்ளோமார்போசிஸ்

C.   தெர்மோட்ரோபிசம்

D.   சைக்லாசிஸ்

22.     கீழ்கண்டவற்றில் மண்   பாதுகாக்கும் முறை எது அல்ல?

A.   மண் துகள்களின்அளவினை அதிகப்படுத்துதல்

B.   காடுகளை வளர்த்தல்

C.   தொடர்ச்சியாகஉரங்களை இடுதல்

D.   ஓடும் நீரின் வேகத்தைகுறைத்தல்

23.     வெங்காயத்தில் உண்ணக் கூடிய பகுதி?

A.   இதழ்

B.   தரை கீழ் தண்டு

C.   வேர்

D.   பூ

24.     " கொய்னா " எந்தமரத்திலிருந்து   எடுக்கப்படுகிறது?

A.   வில்லோ

B.   சின்கோனா

C.   பை

D.   ஓக்

25.     தாவரவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்?

A.   லினன்

B.   லாயிட்

C.   ஆஸ்வால்ட்

D.   தியோப்ராஸ்தஸ்


26.     டர்பன்டைன் எந்த   மரத்திலிருந்து கிடைக்கிறது?

A.   புளியமரம்

B.   பைன்

C.   யூகலிப்டஸ்

D.   வேப்பமரம்

27.     "மஞ்சள் காமாலை"   நோய்சிகிச்சைக்கு   பாரம்பரியமுறையில்   பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம்?

A.   கருக்கனி

B.   மா மரம்

C.   வேம்பு

D.   கீழாநெல்லி

28.     புற்றுநோய் எதிர்ப்புசெயல் திறன் கொண்டதாவரம்?

A.   சீத்தா

B.   முருங்கை

C.   நெட்டிலிங்கம்

D.   தேக்கு

29.     ஹைட்ரோ என்பது?

A.   புரோடோசோவா

B.   சிலண்டிரேட்

C.   பிளாஸ்மோடியம்

D.   இருபாலுறுப்புகளைக்கொண்ட உயிரி

30.     மகரந்தப் பையில்அடங்கியது?

A.   இலைகள்

B.   மகரந்தத் தூள்கள்

C.   பூக்கள்

D.   மொட்டுக்கள்.


31.     உலகிலேயே மிக வேகமாக   வளரும் தாவரம்?

A.   பைன்

B.   மூங்கில்

C.   ஓக்

D.   முருங்கை

32.     தாவரங்களின்வளர்ச்சியை  அளவிட உதவும்கருவி?

A.   டிக்டாபோன்

B.   கிரிஸ்கோகிராப்

C.   ஸ்பெக்ட்ரோஸ்கோப்

D.   ஸ்பெர்ரோமீட்டர்

33.     மார்பின் மற்றும் ஹெரைன் பெறப்படும்தாவரம்?

A.   சைகஸ்

B.   நீட்டம்

C.   அனபீனா

D.   வால்வாக்ஸ்

34.     பக்க வேர்களைத்   தோற்றுவிப்பது?

A.   எபிடெர்மிஸ்

B.   இழைகள்

C.   பெரிசைக்கிள்

D.   கார்டெக்ஸ்

35.     டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி  அமைந்துள்ளது?

A.   m R N A

B.   R N A பாலிமெரேஸ்

C.   D N A லைகேஸ்

D.   D N A பாலிமெரேஸ்

36.     பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர்  காணப்படும் தாவரம்?

A.   ராவனலாமடகாஸ்கரியன்சிஸ்

B.   ஹெலிகோனியா

C.   ஸ்ட்ரெலிட்ஜியாரெஜினே

D.   மியூசா பாரடிசியாகா

37.     டெர்மினலைசேஷன்   நடைபெறும் நிலை?

A.   பேக்டின்

B.   டயாகைனசிஸ்

C.   சைகோடின்

D.   லெப்டோடின்


38.     பின்வரும் எந்த உயிரினம்  உயிர்கட்டுபடுத்தல்முறையில்கிளைகோடாக்சின்  உருவாக்கும் மண்வாழ்நோய்கிருமிகளைஅழிக்கும்?

A.   பெனிசிலியம் நோட்டேடம்

B.   கீடோமியம் குளோபோசம்

C.   ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்

D.   டிரைகோடெர்மாவைரன்ஸ்


39.     பொருட்கள் உயர்செறிவுள்ள பகுதியிலிருந்து குறைந்த  செறிவுள்ள பகுதிக்கு  கடத்தப்படுவது ................?

A.   பிளாஸ்மோலைசிஸ்

B.   பரவல்

C.   சவ்வூடு பரவல்

D.   உள்ளீர்த்தல்.


40.     கீழ்க்கண்ட உயிரினம்ஒன்று  "SCP" என்று அழைக்கப் படுகிறது?

A.   குளோரெல்லா

B.   நாஸ்டாக்

C.   ஈஸ்ட்

D.   காளான்.


41.       காளான்களில் எந்த வகை   வைட்டமின் அதிகமாகஉள்ளது?

A.   வைட்டமின் டி

B.   வைட்டமின் 

C.   வைட்டமின் பி

D.   வைட்டமின் கே

42.       தாவரத்தின் பெண்உறுப்பு?

A.   மகரந்தாள் வட்டம்

B.   புல்லி வட்டம்

C.   சூழ் வட்டம்

D.   அல்லி வட்டம்

43.       சுவாச வேர்களுக்கு ஓர்   எடுத்துக்காட்டு?

A.   அவிசினியா

B.   வாண்டா

C.   அமராந்தஸ்

D.   டாலியா

44.       வாஸ்குலர் கற்றைகொண்ட பூக்கும் தாவரம்?

A.   டெரிடோபைட்டா

B.   பெனரோகோம்

C.   பிரையோபைட்டா

D.   தாலோபைட்டா

45.       ரொட்டி காளான் என்பதன்   அறிவியல் பெயர்?

A.   யுரோமைட்டா

B.   பெசிட்டியோமைட்டா

C.   அஸ்கோமைட்டா

D.   சைகோமைட்டா

46.       பூஞ்சைகள் எவ்வகையைச் சார்ந்தது?

A.   சுயஜீவி

B.   ஒட்டுண்ணி

C.   சாருண்ணி

D.   மேற்கண்ட ஏதுமில்லை

47.       புகையிலை மொசைக்   வைரஸின் மரபுப் பொருள்?

A.   RNA

B.   DNA

C.   இரு இழை DNA

D.   ஒரு இழை DNA

48.      ஒளி சுவாசம் நடைபெறாத   இடம்?

A.   பெர் ஆக்சிசோம்

B.   சைட்டோபிளாசம்

C.   பசுங்கணிகம்

D.   மைட்டோகாண்ட்ரியா.

49.    மஞ்சள் அதிகமாக   பயிரிடப்படம் மாநிலம்?

A.   மகாராஷ்டிரா

B.   தமிழகம்

C.   மேற்கு வங்காளம்

D.   மேற்கண்ட அனைத்தும்

50.     மரக்கட்டையின் மீதுவளரும்   பூஞ்சையின் பெயர்?

A.   லைக்கன்

B.   சைலோபில்லஸ்

C.   கெரட்டினோபில்லஸ்

D.   மேற்கண்ட ஏதுமில்லை.










Post a Comment

0 Comments