சிலப்பதிகாரம் TRB-TET-TNPSC அனைத்து முக்கிய 1- மதிப்பெண் வினா-விடை குறிப்புகள்:
மொத்த வினாக்கள்/ விடைகள் = 48.
TRB-TET-TNPSC - சிலப்பதிகாரம் - கொள்குறி வினா விடை -பாவகை-நூல் விளக்கம்.
* 1) சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியத் தலைவன் கோவலன்.
*2) சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியத் தலைவி கண்ணகி.
* 3) சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கணிகை குலப்பெண் மாதவி.
*4) கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான்.
*5) கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்கன்.
*6) கண்ணகியின் தோழியின் பெயர் சித்திராபதி.
*7) மாதவியின் தோழியின் பெயர் வயந்த மாலை.
*8) சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாண்டிய மன்னனின் பெயர் நெடுஞ்செழியன்.
*9) நெடுஞ்செழியனின் மனைவியின் பெயர் கோப்பெருந்தேவி.
*10) சிலப்பதிகாரத்தில் நடைபெறும் விழா பெயர் இந்திர விழா.
*11) இந்திர விழாவில் மாதவி பாடிய பாடல் பெயர் கானல் வரி.
*12) சிலப்பதிகாரத்தில் வரும் சமணத் துறவியின் பெயர் கவுந்தி அடிகள்.
*13) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
*14) இளங்கோவடிகளின் தந்தையின் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
*15) இளங்கோவடிகளின் தாயின் பெயர் நற்சோணை.
*16) இளங்கோவடிகளின் தமையன் பெயர் சேரன் செங்குட்டவன்.
*17) இளங்கோவடிகள் இளமையிலே துறவு பூண்டு தங்கிய இடம் குணவாயிற் கோட்டம்.
*18) சிலப்பதிகாரத்தில் திருமால் புகழ்பாடும் பகுதியின் பெயர் ஆய்ச்சியர் குரவை.
*19) சிலப்பதிகாரத்தில் முருகன் புகழ்பாடும் பகுதியின் பெயர் குன்றக் குரவை.
*20) சிலப்பதிகாரத்தில் கொற்றவை புகழ்பாடும் பகுதியின் பெயர் வேட்டுவவரி.
*21) சிலப்பதிகாரத்தின் பெரும்பகுதி (காண்டம்) எண்ணிக்கை 3.
*22) சிலப்பதிகாரத்தின் சிறு பிரிவு (காதை) எண்ணிக்கை 30.
*23) சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இடங்களின் பெயர்கள் மற்றும் காதைகள்
1. புகார் காண்டம் - 10 காதைகள்.
2. மதுரை காண்டம் - 13 காதைகள்.
3. வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்.
* புகார் காண்டம் - 10
முதல் காதை (மங்கல வாழ்த்துப் பாடல்)
கடைசி காதை (நாடுகாண் காதை)
* மதுரை காண்டம் - 13
முதல் காதை (காடுகாண் காதை)
கடைசி காதை (கட்டுரை காதை)
* வஞ்சிக் காண்டம் - 7
முதல் காதை (குன்றக் குரவை)
கடைசி காதை (வரந்தரு காதை)
*24) புகார் காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது சோழர் நாட்டை.
*25) மதுரை காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது பாண்டியன் நாட்டை.
*26) வஞ்சி காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது சேர நாட்டை.
*27) சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை 5001.
*28) சிலப்பதிகார நூலின் சமயம் சமண சமயம்.
*29) சிலப்பதிகாரம் நூலின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு.
*30) சிலப்பதிகாரம் பிரித்து எழுதுக
சிலம்பு + அதிகாரம்.
*31) சிலப்பதிகாரம் பெயர் அமையக் காரணம் சிலம்பின் ஆல் இணைந்த கதையை கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
*32) சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகள் இடம் கூறிய வரிகள் அடிகள் நீரே அருளுக.
*33) சிலப்பதிகாரத்தின் மையக் கருத்துக்கள்
1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
3. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
*34) சிலப்பதிகாரத்தை எழுதிய உரை ஆசிரியர்கள்
1. அரும்பத உரைகாரர்.
2. அடியார்க்கு நல்லார்.
3. நா. மு. வேங்கடசாமி நாட்டார்.
*35) சிலப்பதிகாரத்தில் தலைக்கோல் பட்டம் வென்றவர் யார் மாதவி.
*36) சிலப்பதிகாரத்தில் வரும் இலங்கை மன்னனின் பெயர் கடலாகு.
*37) மாதவி கோவலன் நெய் விட்டு பிரியும்போது கடிதம் யாரிடம் கொடுத்து அனுப்புவாள் வசந்தமாலை மாங்காட்டு மறையோன்.
*38) மாதவி கடிதம் கொடுத்ததை கடித இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்கிறது.
*39) சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
* நாடக காப்பியம்
* உரை இடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்
* முத்தமிழ் காப்பியம்
* குடிமக்கள் காப்பியம்
* முதற் காப்பியம்
* ஒற்றுமைக் காப்பியம்
* மூவேந்தர் காப்பியம்
* தமிழின் தேசிய காப்பியம்
* புரட்சிக் காப்பியம்.
*40) இளங்கோவடிகள் ஒரு அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.
*41) இளங்கோவடிகள் பற்றிய பாரதியார் எவ்வாறு புகழ்கிறார்
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்பது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை".
* சிலப்பதிகாரத்தைப் பற்றி பாரதியார் எவ்வாறு புகழ்கிறார்
" நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு"
*42) சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
*43) இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்பட காரணம் காலத் தொடர்பு, கதை தொடர்பு, பாவகை தொடர்பு ஆகியவை இருப்பதால் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
*44) சிலப்பதிகாரத்தின் கதை உருவம் எவ்வகை இசை நாடகம் போல் ஆனது.
*45) சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தை பார்த்தோம் என்று கூறியவர்கள் சேரன் செங்குட்டுவன், சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகள்.
*46) வேங்கை மரத்தின் கீழ் யாரைப் பார்த்தார்கள் கண்ணகியை பார்த்தார்கள்.
*47) தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தீரும் சிலப்பதிகாரம் எனக் கூறியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
நன்றி ஆசிரியர்களே!
என்றும் அன்புடன்.,
கல்வி-ஆசிரியர்கள்.
திருப்பூர்.




0 Comments