காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

தேர்வைக் கண்டு பயம் வேண்டாம்

  

*தேர்வைக் கண்டு பயம் வேண்டாம்*


*தேர்வில் மாணவர்கள் பெறுகிற மதிப்பெண்கள் தான் அவர்களுடைய தகுதியைத் தீர்மானிக்கும். ஆனால், அதுவே அவர்களுடைய வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கப் போவதில்லை.


*பள்ளியில் மிக மோசமான அல்லது சராசரியான மதிப்பெண்கள் பெற்ற பலர் வெற்றிகரமானவர்களாகப் பிராகாசித்து இருக்கிறார்கள். எனவே தேர்வைக் கண்டு பயம் வேண்டாம். தன்னம்பிக்கையே வெற்றியின் முதல்படி.


*நான் இந்த பாடத்தை முடித்து விடுவேனா? என்னால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியுமா? என்ற கேள்விகளுக்கு ஆம், என்னால் முடியும் என்று பதில் சொல்லிக் கொண்டால் அவருக்குள் நம்பிக்கை வளரும்.


*ஆனால், முடியாது என்று நினைத்தால் தோல்வி எண்ணம் அவர்களைத் துவளச்செய்துவிடும். அதாவது, தேர்வுத் தொடங்கும் முன்னரே தோற்றுவிடுவார்.


*தேர்வுத் தொடங்கி நடைபெறும் சமயத்தில் அவருடைய தோல்விக் குறித்த அச்சம் படிப்படியாக வளர்ந்து, அவருடைய ஆற்றலை வடியச் செய்துவிடும்.


 *எப்போதுமே, தன்னால் முடியும் என்கிற சிந்தனை மாணவர்களுக்கு இருக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் புதிய தெம்புடன் செயல்பட முடியும்.


*இப்படித்தான் படிக்க வேண்டும் என்றோ, எப்படி படிக்க வேண்டும் என்றோ உலகளாவிய திட்டம் ஒன்றும் இதுவரை இல்லை.


*சிலர் அதிகாலையில் எழுந்து படிப்பார்கள், சிலர் தமக்கு வசதிப்படும் ஏதேனும் ஒரு நேரத்தைத் தேர்வு செய்து படிப்பார்கள்.


*நோக்கத்தை அடைவதற்கு கால நேரம் ஒரு பொருட்டே இல் நீங்கள் எப்படி ஆர்வத்துடன் அக்கறையோடு படிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.


*நீங்கள் விரும்பிப் படித்தால் எந்தப் பாடமும் கடினமானதல்ல நினைவில் கொள்ளவும். கவனித்துப் படித்தால் எளிதுதான்.


*உங்களுக்குரிய பாடம் அனைத்தையும் மனப்பூர்வமாக விரும்புங்கள். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் காலப்போக்கில் விருப்பம் ஏற்பட்டு விடும்.


*ஒரு பாடத்தைப் பற்றிய முக்கிய அம்சங்களை உங்கள் நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும், கடந்த ஆண்டுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எவை என்பதை திருப்பிப்பார்க்க வேண்டும்.


*நான் தேர்வைக் கண்டு பயப்பட மாட்டேன் நிச்சயமாகத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஜெயிப்பேன் என்று உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.


*அதற்கேற்ப படியுங்கள் இதனால் உங்களது தன்னம்பிக்கை மேலோங்கி, தேர்வு பயத்தை விரட்ட முடியும்.


*உடற்பயிற்சிக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள் சரியாக ஓய்வெடுத்து, சரியாக தூங்குகிறீர்களா என்பதை கவனியுங்கள்.


*தேர்வு நேரத்தில் மாணவர்களிடம் தேவையில்லாத பதற்றம் ஏற்படும் சில நேரங்களில், ஒரு மாணவர் விரும்புகிற குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் உள்ள படிப்பில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டுமே என்ற நினைப்பு கூட பதற்றத்தை ஏற்படுத்தலாம்.


*இதனால் ஏற்படும் மன அழுத்தம், அந்த மாணவர் தேர்வு எழுதுவதற்குப் பாதகமாகி விடுகிறது. 


**ஒரு பாடத்தைப் பற்றிய முக்கிய அம்சங்களை உங்கள் நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும், கடந்த ஆண்டுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எவை என்பதை திருப்பிப்பார்க்க வேண்டும்.


*நான் தேர்வைக் கண்டு பயப்பட மாட்டேன் நிச்சயமாகத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஜெயிப்பேன் என்று உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.


*அதற்கேற்ப படியுங்கள் இதனால் உங்களது தன்னம்பிக்கை மேலோங்கி, தேர்வு பயத்தை விரட்ட முடியும்.


*உடற்பயிற்சிக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள் சரியாக ஓய்வெடுத்து, சரியாக தூங்குகிறீர்களா என்பதை கவனியுங்கள்.


*தேர்வு நேரத்தில் மாணவர்களிடம் தேவையில்லாத பதற்றம் ஏற்படும் சில நேரங்களில், ஒரு மாணவர் விரும்புகிற குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் உள்ள படிப்பில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டுமே என்ற நினைப்பு கூட பதற்றத்தை ஏற்படுத்தலாம்.


*இதனால் ஏற்படும் மன அழுத்தம், அந்த மாணவர் தேர்வு எழுதுவதற்குப் பாதகமாகி விடுகிறது. 


*பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் மாணவர்களின் தேர்வு பயத்துக்கு மிக முக்கியமான காரணமாக அமைகின்றன. 


*பெற்றோர்களின் எதிர்பார்ப்பைக் குறை சொல்ல முடியாது. ஆனால் தங்களுடைய மகன்/மகள் அதற்கேற்ற வகையில் இருக்கிறானா என்று புரியாமல் அவர்கள் மீது தங்களது விருப்பத்தைத் திணிக்கிறார்கள்.


*தங்களது குழந்தைகளின் திறமைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி, அவர்களுடைய இலக்கத் தீர்மானிக்க உதவ வேண்டும். 


*ஒருபோதும், மற்ற குழந்தைகளோடு அவர்களை ஒப்பிடாதீர்கள்.


 *உங்கள் குழந்தைகள் எதிர்நோக்கியிருக்கும் சிரமங்களைக் கண்டறிந்து களைய உதவுங்கள்.


 *உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஆலோசனையோ, அறிவுரையோ கூறுவதற்கு முன் அவர்களுடைய கவலையையும் அச்சத்தையும் ஆறுதலாய் கேட்கத் தயாராக இருங்கள் .


*சாத்தியமில்லாத எதையும் அறிவுரையாக கூறாதீர்கள். மாறாக உங்களுடைய குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலான வார்த்தையைக் கூறுங்கள்.


*முழுமையான தயாரிப்புடன் தேர்வு அறைக்குள் நுழையுங்கள் தேர்வு தொடங்கியதும் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம்.


*மூச்சை உள்ளிழுத்து, வெளியே விட்டு உங்களை ஆசுவாசப்படுத்துங்கள். கேள்வித்தாளைப் பெற்றதும் உங்களுக்கு நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுங்கள்.


*இது உங்களுக்குள் நம்பிக்கையை பலப்படுத்தும். கடினமான கேள்விக்கும் பதில் எழுகிற தெளிவை ஏற்படுத்தும். 


*தொடக்கத்திலிருந்து நேரத்தை முறைப்படுத்துங்கள். அப்போது தான் கடைசி நேரத்தில் பரபரப்பு இல்லாமல் விடைகளை எழுதி முடிக்க முடியும்.


*கேள்விகளுக்கான பதில்களை தேர்வில் தரப்படும் நேரத்துக்குள் எழுதிப் பழக வேண்டும்.


*கட்டுரை எழுதும்போது, சுருக்கமான விவரக் குறிப்புகளுடன் உள்ளடக்கத்தின் முக்கிய அம்சங்களோடு எழுதிப் பழகினால் நல்லது.


*கட்டுரையின் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிட்டுப் படித்தால் அவை நினைவில் கொண்டுவந்தால் கட்டுரையின் தொடர்ச்சி மனத்திரையில் ஓடும்.


*ஒரு பதிலை எழுதும் போது தேவையான அளவு மட்டும் எழுதினால் போதுமானது, உங்களுக்குத் தெரிந்த விவரங்கள் அனைத்தையும் எழுத வேண்டும் என்று அவசியமில்லை.


*உங்களுக்குப் பிடித்த தலைப்பு என்பதற்காக கட்டுரைகளை நீட்டி எழுதி நேரத்தை வீணாக்கி விடாதீர்கள். அது மொத்தத்தில் நேரத்தை விழுங்கி உங்களைச் சிரமப்படுத்திவிடும்.


*தேர்வறையில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு தேர்வை நன்றாக எழுதிவிட்டோம் என்று அடுத்து வரும் தேர்வுகளில் அசட்டையாக இருப்பதோ, ஒரு தேர்வை மோசமாக எழுதிவிட்டோம் என்று அடுத்த தேர்வில் சோர்வடைவதோ தேவையில்லை.


*ஒரு தேர்வைச் சரியாக எழுதவில்லை என்று நினைத்தால் அந்தப் பதற்றம் அடுத்து வரும் தேர்வுகளில் உங்களது கவனத்தை சிதறடித்துவிடும். 


*ஒவ்வொரு தேர்வையும் அதற்குரிய முக்கியத்துவத்தோடு அணுகுங்கள், ஒரு கேள்விக்குப் பதில் எழுதிவிட்டு, அடுத்த கேள்வியில் கவனம் செலுத்துவதே நல்லது. 


*விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தத் தேர்வையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.


                நன்றியுடன் வணக்கம்

********************************************

                 ம.அரவிந்த்-B.SC.,B.Ed.,

                   கணித ஆசிரியர்.,

                           கோவை.                

                    கல்வி ஆசிரியர்கள்.

*******************************************

 

மாணவர்களின் நலனுக்காக அழகான மற்றும் நல்ல சிறப்பான முயற்சி மேற்கொள்ளும் அருமை நண்பரான அரவிந்த்-கணித ஆசிரியர் அவர்களை வாழ்த்துகிறேன்...........

மேலும் உங்களின் கல்விப் பணி மென்மேலும் உயர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்................


என்றும் மாறாத அன்புடன் 

கார்த்திக்.,

கல்வி ஆசிரியர்கள்-Admin

முதுகலை கணித ஆசிரியர் .,

திருப்பூர்-641664.
















Post a Comment

1 Comments

Aravind M said…
Thankyou for your wishes ❣️